
ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் கௌதம் அதானியைப் பின்னுக்குத் தள்ளி டிக் டாக் செயலியின் நிறுவனர் ஜாங் யிமிங் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
பைட்டான்ஸ் நிறுவன உரிமையாளரான ஜாங் யிமிங்கின் சொத்து மதிப்பு கடந்த 7 ஆண்டுகளில் 13 பில்லியன் டாலரிலிருந்து 105 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
பைட்டான்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் டூபாவோ, சீடான்ஸ் போன்ற ஏஐ கருவிகளை உருவாக்கியதன் மூலம் அவர் இந்த பிரம்மாண்ட வளர்ச்சியைப் பெற்றுள்ளார்.