
ஜம்பிங் ஜாக்ஸ் எனப்படும் குதிக்கும் பயிற்சியை தினமும் 50 முறை செய்வதால் கால்கள் மற்றும் தொடைகளின் தசைகள் வலுவடைந்து உடல் சமநிலை மேம்படும்.
இந்தப் பயிற்சியின்போது இதயத் துடிப்பு அதிகரித்து ரத்த ஓட்டம் மேம்படுவதோடு, இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவு உதவும்.
மேலும் இது எண்டோர்பின் போன்ற வேதிப்பொருட்களைச் சுரக்கச் செய்து மன அழுத்தத்தைக் குறைத்து புத்துணர்ச்சி அளிக்க உதவுவதோடு, கலோரிகளைச் செலவிடவும் உதவும்.