
தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதையால், நாளை நீலகிரி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
இன்று முதல் 21-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கி.மீ வேகம் வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.