
செயற்கை நுண்ணறிவு மற்றும் செமிகண்டக்டர் ஏற்றுமதி மூலம் கிடைத்த உபரி வருவாயில் இருந்து தனது குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 314 டாலர் (சுமார் ரூ.30,000) வழங்க தைவான் அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக 7.14 பில்லியன் டாலர் நிதியை ஒதுக்கியுள்ளதாக அறிவித்த தைவான் அதிபர் லாய் சிங் டீ, 2026-ல் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி கடந்த 39 ஆண்டுகளில் இல்லாத அளவாக 11.05% ஆக உயரும் எனக் கணித்துள்ளார்.
வருமான சமத்துவமின்மை 6.17 மடங்கு அதிகரித்துள்ளதால், நுகர்வை ஊக்குவிக்கவும் பணவீக்கத்தைச் சமாளிக்கவும் இந்தத் தொகை 2027-ஆம் ஆண்டில் மக்களுக்கு நேரடியாக வழங்கப்பட உள்ளது.