சமைத்த 100 கிராம் தோலில்லாத சிக்கனில் 110-130 கலோரிகளும், 25-27 கிராம் புரதமும் உள்ள நிலையில், எண்ணெயில்லா மீனில் 90-110 கலோரிகளும், 20-23 கிராம் புரதமும் உள்ளன.
மீனில் கொழுப்பு சத்து 3 கிராமுக்கு குறைவாகவும், சிக்கனில் 3-5 கிராம் வரையும் உள்ளது; தோலுள்ள சிக்கன் மற்றும் எண்ணெயுள்ள மீனில் 180-200 கிராம் கலோரிகள் உள்ளன.
மீனில் உள்ள நல்ல கொழுப்புகள் இதய ஆரோக்கியத்திற்கு உகந்தது மற்றும் எளிதில் செரிமானமாகும் என்றாலும், உடலுக்கு தேவையான அனைத்து புரதங்களையும் பெற இரண்டையும் சாப்பிட டயட்டீஷியன்கள் பரிந்துரைக்கின்றனர்.