
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு அருகில் செயல்படும் கல்குவாரிகளில் வைக்கப்படும் வெடிபொருள்களின் அதிர்வு குறித்து அறிவியல் ரீதியான ஆய்வு நடத்த அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 29 கல்குவாரிகளை ஆய்வு செய்த குழு, 140 பக்கங்கள் கொண்ட அறிக்கையைத் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
குவாரிகளால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குடியிருப்புகளுக்கு அருகில் பாதுகாப்பு மண்டலங்களை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.