
நடப்பு கல்வியாண்டில் 3-வது மொழி கட்டாயம் என்பதிலிருந்து 6-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விலக்கு அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதிய மொழியை அறிமுகப்படுத்தியதால் பாடப் புத்தகம் இல்லாதது உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்களால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
சிபிஎஸ்இ 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதே விலக்கு 6-ம் வகுப்பு மாணவர்களுக்கும் தரப்படவேண்டும் என்று நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.