
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் லிஜோமோல் ஜோஸ் நடிக்கும் 'பத்தா' திரைப்படம் அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ், ஸ்டார் ஸ்டூடியோ 18 மற்றும் சினி 1 ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
இயக்குநர் அட்லி வழங்கும் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில், இது விஜய் சேதுபதி மற்றும் பாலாஜி தரணிதரன் இணையும் மூன்றாவது படமாகும்.