வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் வசூலிக்கும்போது வாடிக்கையாளர்களை அச்சுறுத்துவதையோ அல்லது இரவு நேரங்களில் அழைப்பதையோ தவிர்க்க வேண்டும் என ரிசர்வ் வங்கி (RBI) புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
விதிமுறைகளை மீறி கடன் வசூலில் கெடுபிடி காட்டும் வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
வாடிக்கையாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த கடுமையான விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.