
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பலூச் விடுதலைப் படை (பிஎல்ஏ) நடத்திய இருவேறு தாக்குதல்களில் 25 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ஜியாரத் கிராஸ் பகுதியில் 18 வீரர்களும், ஹாஜிகா பகுதியில் 7 வீரர்களும் பலியானதாக பிஎல்ஏ அமைப்பு தெரிவித்துள்ளது, இதற்குப் பதிலடியாக ராணுவம் நடத்திய தாக்குதலில் 48 பேர் கொல்லப்பட்டனர்.
சுயாட்சி கோரி போராடி வரும் பிரிவினைவாதிகளுக்கும் பாகிஸ்தான் ராணுவத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல், அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.