
இந்தோனேசியாவின் மலுகு தீவு அருகே பண்டா கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானது.
மலுகு தீவில் இருந்து 162 கிலோ மீட்டர் வடகிழக்கே, 143 கிலோ மீட்டர் ஆழத்தில் அந்நாட்டு நேரப்படி மாலை 6.56 மணிக்கு இந்த நிலநடுக்கம் நிகழ்ந்தது.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.