
இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் மகாபாரதக் கதையை மையமாகக் கொண்ட 'மஹாவீர் கர்ணா' திரைப்படம் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ஹைப்ரிட் லைவ்-ஆக்ஷன் தொழில்நுட்பத்தில் உருவாகும் இப்படத்தில், கர்ணனின் கொடைத்தன்மை மற்றும் வாக்குறுதிக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் மையக்கருவாக உள்ளது.
ஜெயந்திலால் கடா வழங்கும் இப்படத்திற்கு ஞானி இசையமைக்க, ராம்ஜி டாட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.