
உக்ரைன் இராணுவம் ரஷ்யாவிற்கு எதிராக நடத்திய 'ஆப்பரேஷன் ஸ்பைடர்வெப்' ரகசிய ட்ரோன் தாக்குதலை மையமாக வைத்து பிரித்தானியாவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சரக்கு லாரிகளுக்குள் மறைத்து வைக்கப்படும் மலிவு விலை காமிகேஸ் ட்ரோன்களை எல்லைக்கு உள்ளேயே கொண்டு சென்று தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளது.
சிறிய ட்ரோன்களைக் கண்டறிவது தற்போதைய வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு பெரும் சவாலாக உள்ளதாக இராணுவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.