
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாட்டா நகரில் ராணுவ பயிற்சி விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
நவன் கில்லி பகுதியில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறிய ரக ராணுவ விமானம் கட்டுப்பாட்டை இழந்து தீப்பற்றி எரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருப்பது தெரியவந்துள்ளதுடன், மீட்புக்குழுவினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.