ஈரானின் ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே அமைந்துள்ள கெஷ்ம் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தச் சிறிய அளவிலான தாக்குதல் பாதுகாப்பு காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் இடைக்கால தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. தரையிலிருந்து வான் பரப்பை தாக்கும் திறன் கொண்ட ஈரானின் ஏவுகணைகளை அமெரிக்கா தாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ம் அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து மேற்கொண்ட கூட்டுத் தாக்குதலுக்குப் பிறகு மேற்காசியாவில் ஏற்கனவே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்தச் சம்பவம் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.