
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
மீனவர்களின் படகுப்போட்டியை மையமாகக் கொண்ட இப்படத்தில், சூரி ‘முத்துக்காளி’ எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
1999-ல் ‘சங்கமம்’ படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாகத் தொடங்கி, 25 ஆண்டுகளில் ஹீரோவாக உயர்ந்துள்ள சூரியின் திரைப்பயணத்தை ஆர்.ஜே. பாலாஜி இசை வெளியீட்டு விழாவில் பாராட்டியுள்ளார்.