
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மனைவி சிராந்தி ராஜபக்சே கொழும்புவில் உள்ள அவரது இல்லத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிரிலிய சவியா அறக்கட்டளை மூலம் மருத்துவமனைக்கு சிடி ஸ்கேன் கருவி வாங்க திரட்டப்பட்ட 10 மில்லியன் ரூபாய் நிதியில் முறைகேடு செய்ததாகக் கூறப்படும் புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சிராந்தி ராஜபக்சே அக்டோபர் 13 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டுகளை அவரது தரப்பு மறுத்துள்ளது.