
இயக்குநர் மதிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள 'மண்டாடி' படத்தின் அதிரடி டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
நாகை மாவட்ட மீனவர்களின் வாழ்க்கை மற்றும் படகுப் போட்டிகளை மையமாகக் கொண்ட இப்படம், செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மத்திய தணிக்கை வாரியம் இப்படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பில் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகியுள்ளது.