
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் இந்த ஆண்டின் பிற்பகுதியிலோ அல்லது அடுத்த ஆண்டிலோ செர்னோபில் அணு உலை விபத்து போன்ற ஒரு பேரழிவு நிகழக்கூடும் என ஜெஃப்ரி ஹிண்டன் எச்சரித்துள்ளார்.
AI நிறுவனங்கள் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல் புதிய கருவிகளை உருவாக்குவதாகவும், நிதி மற்றும் மின்சார கட்டமைப்புகள் முடங்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தன்னார்வத்துடன் AI குறித்த ஆய்வுகளில் ஈடுபடுபவர்கள் லாபத்திற்கே முன்னுரிமை அளிப்பதாகவும், இயந்திரங்கள் மனித கட்டுப்பாட்டை மீறி செயல்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.