
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் 19 வயது இளைஞர், 44 வயது நபர் மற்றும் 56 வயது பெண் ஆகியோர் பலியான நிலையில், 2 வயது சிறுவன் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியதாக 15 வயது சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளதோடு, அவனிடமிருந்து 2 துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளனர்.