
அமெரிக்காவில் நடைபெற்று வரும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் ஜெசிகா பெகுலா வெற்றி பெற்றுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் சிமோனா வால்டர்ட்டை எதிர்கொண்ட ஜெசிகா பெகுலா, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
முன்னணி வீராங்கனைகள் நேரடியாக 2-வது சுற்றில் விளையாடிய நிலையில், இந்த வெற்றி பெகுலாவின் அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது.