
அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையிலான 'ஸ்டார்லிங்க்' நிறுவனம், இந்தியாவில் பாதுகாப்பான இணையதள சேவையை வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்திய ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நெருக்கமாக பணியாற்றியுள்ளதாக ஸ்டார்லிங்க் குறிப்பிட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கான இணைய போக்குவரத்தை பாதுகாப்பாக கையாளும் வகையில், நாட்டுக்குள்ளேயே பிரத்யேக கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.