
கடன் தவணை செலுத்தாதவர்களின் ஸ்மார்ட்போன்களை உடனடியாக முடக்க முடியாது என்றும், இதற்கான புதிய வரைவு விதிகளை ஆர்பிஐ முன்மொழிந்துள்ளது.
கடன் கணக்கு 90 நாட்கள் நிலுவையில் இருந்தால் மட்டுமே சாதனத்தின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியும், அதற்கு முன்னதாக 60 மற்றும் 21 நாட்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
தவறாகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டால் கடன் வழங்குநர் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ.250 இழப்பீடு வழங்க வேண்டும் என வரைவு விதிகள் தெரிவிக்கின்றன.