
வினு மான்கட் கோப்பை கிரிக்கெட் தொடரில், வீரேந்தர் சேவாக்கின் மகன் ஆரியவீர் சேவாக் 173 ரன்கள் குவித்து அதிரடி சதம் அடித்துள்ளார்.
ஆரியவீரின் சதத்தால் டெல்லி அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்தது.
ஆரியவீர் சேவாக் சமீபத்தில் இந்திய யு-19 அணியில் அறிமுகமாகி, 3 போட்டிகளில் 109 ரன்கள் எடுத்திருந்தார்.