
நடிகை வினோதினி ஸ்பா ஒன்றில் மசாஜ் செய்யச் சென்றபோது தனது தாலி செயின் மாயமானதாக இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
மசாஜ் செய்வதற்கு முன் கழற்றி வைத்த தாலி செயின், இரண்டு நாட்களுக்குப் பிறகு காணாமல் போனதை உணர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்பா நிர்வாகத்திடம் உரிய பதில் கிடைக்காததால், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக நடிகை வினோதினி கூறியுள்ளார்.