மதிமாறன் புகேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியான ‘மண்டாடி’ திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட பாய்மரப் படகு போட்டியை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பல பிரபலங்கள் படக்குழுவை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினரை நேரில் அழைத்து சந்தித்துப் பாராட்டியுள்ளார்; இது தனது சினிமா பயணத்திற்கு புதிய வெளிச்சம் என சூரி கூறியுள்ளார்.