
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரருமான 38 வயது கரன் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் 2016, 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் மூன்று வெவ்வேறு அணிகளுக்காகத் தொடர்ச்சியாகக் கோப்பையை வென்ற முதல் வீரர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
தனது கிரிக்கெட் பயணத்தில் 90 ஐபிஎல் போட்டிகளில் 83 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள கரன் சர்மா, ஓய்வுக்குப் பிறகு பயிற்சியாளராகப் பணியாற்றத் திட்டமிட்டுள்ளார்.