
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி ஹேமலதா மாயமான சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் 9 நாட்களாகத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மறைந்த சிறுமியின் வீடு மற்றும் அருகிலுள்ள வயல்வெளி பகுதியில் வசிக்கும் மூதாட்டி மணிமேகலை வீட்டில் விசாரணை நடத்தப்பட்டதில், கடந்த 11-ம் தேதி அதிகாலையில் மர்ம நபர் ஒருவர் நடமாடியது தெரியவந்துள்ளது.
இந்த புதிய தடயத்தின் அடிப்படையில் மாயமான சிறுமியின் வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவிலுள்ள செங்கல்சூளையில் பணிபுரியும் 5 தொழிலாளர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.