/nakkheeran/media/media_files/2026/11/03/cbe-karumathampatti-ps-cm-vijay-ins-2026-11-03-18-32-40.jpg)
பெருந்துறை நிகழ்ச்சியை முடித்துவிட்டு கோவை விமான நிலையம் செல்லும் வழியில், கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்குத் திடீரெனச் சென்ற முதலமைச்சர் விஜய் 10 நிமிடங்கள் ஆய்வு மேற்கொண்டார்.
காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்த முதலமைச்சர், அங்கு பதிவாகும் வழக்குகள், பணியாளர்களின் பணிச்சூழல் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும் காவலர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் முறையாகக் கிடைக்கின்றனவா என்றும் விசாரித்த அவர், ஆய்வை முடித்துக்கொண்டு கோவை விமான நிலையம் வழியாக சென்னைக்குப் புறப்பட்டார்.