
மதுரை மத்திய சிறையில் 100 கோடி ரூபாய் அளவுக்கு போலி கணக்கு காட்டி ஊழல் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
2016 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் நிலையில், மூத்த ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட உள்ளது.
இந்த வழக்கில் 4 மாதங்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும், தவறினால் விசாரணை வேறு புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.