
திமுகவில் அமைப்பு ரீதியாக 77 மாவட்டங்களை 110 மாவட்டங்களாகப் பிரித்ததைத் தொடர்ந்து, நிர்வாக மறுசீரமைப்பு பணிக்காக 76 தலைமை கழக பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பிரதிநிதிகள் தேர்வுப் பட்டியலை ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி மற்றும் சபரீசன் அடங்கிய நால்வர் அணி இறுதி செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் வரும் 15 நாட்களுக்குள் தொகுதிவாரியாக புதிய நிர்வாக அமைப்புகளை உருவாக்க பரிந்துரைகளை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.