
நகராட்சி நிர்வாகத் துறை முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தொடர்புடைய 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.
டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில், சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் நடந்த சோதனையில் 241 முக்கிய ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திமுக முதன்மை செயலாளரான கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர்கள் ரவிச்சந்திரன் உள்ளிட்டோரின் வீடு மற்றும் கட்டுமான நிறுவனங்களில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.