/polimer-news/media/media_files/2026/10/05/9-2026-10-05-14-46-51.jpg)
கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாளையும் பகல்நேர வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், ஓரிரு இடங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.