Economy
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் முன்னாள் துணைத் தலைவருக்கு ஜாமீன்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் முன்னாள் துணைத் தலைவருக்கு ஜாமீன்

maalaimalar1h
THE BRIEF
1

26 வங்கிகளிடம் ரூ.19,694.33 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் முன்னாள் துணைத் தலைவர் விஸ்வநாத் ராவுக்கு பம்பாய் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

2

67 வயதான விஸ்வநாத் ராவ், பிப்ரவரி மாதம் ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்துகொண்டது மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர்.

3

விசாரணை முடிந்துவிட்டதால் அவரை தொடர்ந்து காவலில் வைப்பதில் பயன் இல்லை என்று நீதிபதி மிலிந்த் ஜாதவ் தலைமையிலான அமர்வு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.