
குவாலிஃபையர் 2 போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த கோவை 183 ரன்கள் எடுத்த நிலையில், தீபன் லிங்கேஷ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த, திருச்சி அணி 99 ரன்களுக்கு சுருண்டது.
நாளை இரவு 7.30 மணிக்கு சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் கோவை கிங்ஸ் அணி மதுரை பந்தர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.