
பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை அதிக கட்டண திட்டங்களுக்கு மாற்றும் நோக்கில், மிகவும் பிரபலமான ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தை முற்றிலும் ரத்து செய்துள்ளது.
ரூ.299 திட்டம் தவிர ரூ.579, ரூ.619 மற்றும் ரூ.649 ஆகிய இடைநிலை திட்டங்களும் நீக்கப்பட்டுள்ளதால், பயனர்கள் இனி கூடுதல் பலன்களுடன் கூடிய ரூ.349 திட்டத்திற்கு மாற வேண்டும்.
இந்த மறைமுக கட்டண உயர்வு மூலம் வாடிக்கையாளர்களுக்கு மாதத்திற்கு ரூ.50 கூடுதல் செலவாகும் நிலையில், 2026 இறுதிக்குள் தொலைத்தொடர்பு துறையில் 12% முதல் 15% வரை கட்டணம் உயரலாம் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.