
வடகொரியா தனது கடற்படையில் 5,000 டன் எடையுள்ள 'காங் கோன்' என்ற அதிநவீன வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பு கப்பலை அதிகாரப்பூர்வமாக இணைத்துள்ளது.
சோ ஹியோன் வகையைச் சேர்ந்த இந்த இரண்டாவது போர்க்கப்பல், பல்வேறு போர் மற்றும் நம்பகத்தன்மை சோதனைகளை முடித்து கிழக்குக் கடல் கடற்படைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.
அதிபர் கிம் ஜோங் உன் முன்னிலையில் நடந்த விழாவில், ஒட்டுமொத்த கடற்படையையும் அணுசக்தி ஆயுதம் ஏந்திய படையாக மாற்ற வேண்டும் என ராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.