
இணைய வசதி இல்லாமலும் பணப்பரிமாற்றம் செய்யும் வகையில் 'போன் பே - யுபிஐ 123பே' என்ற புதிய சேவையை போன்பே நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பட்டன் போன்களைப் பயன்படுத்தும் சுமார் 20 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கருத்தில் கொண்டு, எஸ்எம்எஸ் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்தச் சேவை உருவாக்கப்பட்டுள்ளது.
நோக்கியா, லாவா மற்றும் ஐடெல் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து, இந்தச் சேவை போன்களில் முன்பே நிறுவப்பட்டோ அல்லது பதிவேற்றப்பட்டோ வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.