
போக்சோ வழக்கில் கைதான ஜெம் வீரமணி வழக்கில் தங்களை இணைத்து பேசிய அமைச்சர்கள் சி.டி.ஆர்.நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக ஐ.டி. பிரிவுக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்ய திமுகவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஜெம் வீரமணி விவகாரத்தில் முந்தைய திமுக அரசு தப்பிக்க விட்டுவிட்டதாக அமைச்சர்கள் பேட்டி அளித்திருந்ததாகவும், ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மனு தாக்கல் செய்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி, அமைச்சர்கள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக தொழில்நுட்ப பிரிவுக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்ய அனுமதித்து உத்தரவிட்டுள்ளார்.