
நடப்பு ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் 12,921 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக சி.எஸ்.டி.எல். தரவுகள் தெரிவிக்கின்றன.
மார்ச் முதல் ஜூன் வரை பங்குகளை விற்று வந்த முதலீட்டாளர்கள், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மீண்டும் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.
அமெரிக்க வட்டி விகிதம் குறையும் என்ற எதிர்பார்ப்பு, கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் ரூபாய் மதிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகியவை இந்த முதலீட்டு வரவுக்குக் காரணமாகும்.