செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் நிறுவனங்கள் அதிக முதலீடு செய்வதால், தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கும் வேகம் குறையும் என ஸ்ரீதர் வேம்பு எச்சரித்துள்ளார்.
Zoho நிறுவனம் முன்பு இருந்ததை விட தற்போது புதிய பணியாளர்களை நியமிப்பதைக் குறைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது ஒட்டுமொத்த ஐடி துறையின் போக்காக மாறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப முதலீடுகளால் உற்பத்தித்திறன் அதிகரித்தாலும், இளைஞர்களுக்கு நிலையான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார சவாலாக உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.