
இயக்குநர் ராகவ் மிர்தத் இயக்கத்தில் பரிதாபங்கள் டிராவிட் மற்றும் பலர் நடிப்பில் வெளியான ஹாரர் ஃபேண்டஸி காமெடி திரைப்படமான 'ட்ரோன்ஸ்' படம் ஜெயிலர் 2 படத்துடன் ரிலீஸ் செய்யப்பட்டது.
ஜெயிலர் 2 படத்திற்குத் திரையரங்குகள் குவிந்ததால், ட்ரோன்ஸ் படத்திற்குப் போதுமான திரையரங்குகளோ முறையான காட்சிகளோ கிடைக்கவில்லை எனப் படக்குழு தெரிவித்தது.
ஒவ்வொரு தியேட்டர் உரிமையாளர்களிடமும் கெஞ்சியதாகக் கூறி படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் சதீஷ் கண்கலங்கிய நிலையில், புதிய படங்களின் வருகையால் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.