
மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் 60 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 63 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், சுமார் 16 லட்சம் பேர் இதனால் பயன்பெறுவார்கள்.
இந்த அகவிலைப்படி உயர்வால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.1,858 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.