
ஓபன்ஏஐ நிறுவனத்தில் பாதுகாப்புப் பிரிவு உயர் அதிகாரியாகப் பணியாற்றி வந்த டேவிட் ராபின்சன் தனது பதவியை ராஜினாமா செய்து பகிரங்கக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
நிறுவனம் சோதனை மற்றும் தவறு என்ற முறையையே பின்பற்றி வருவதாகவும், ஏஐ தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியால் இந்த முறையில் எதிர்காலத்தில் பேரழிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
தயாரிப்புகளை வெளியிடும் வேகத்தை விட பாதுகாப்பு தரங்களை அடைவதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், ஏஐ நிறுவனங்கள் அணுசக்தி நிலையங்களைப் போலப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.