
சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் வெற்றி பெற்றார்.
காலிறுதியில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதிய ஸ்வரேவ் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் பிரான்ஸ் வீரர் ஆர்தர் ஜியா காயத்தால் விலகியதை அடுத்து, ஸ்பெயினின் அலெஜாண்ட்ரோ டேவிடோவிச் போகினா அரையிறுதிக்கு முன்னேறினார்.