
அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள 'அன்பில் அவன்' திரைப்படம் வரும் செப்டம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார், சண்டைக் காட்சிகளை பீட்டர் ஹெயின் வடிவமைத்துள்ளார்.
ஹேப்பி ஹை பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம், காதல் மற்றும் ஆக்ஷன் கலந்த கதையம்சத்துடன் அசோக் செல்வனின் முந்தைய படங்களிலிருந்து மாறுபட்ட அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.