
தமிழகம் முழுவதும் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் கட்டணம் வசூலித்த 67 டாஸ்மாக் பணியாளர்களை அதிகாரிகள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களில் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் அடங்குவர்; இந்த எண்ணிக்கை 100-ஐ தாண்ட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மது பாட்டிலுக்கு ஒரு ரூபாய் கூடுதலாக வசூலித்தாலும் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படும் என அமைச்சர் விக்னேஷ் எச்சரித்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.