
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த அதன் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் போனான 'ஐபோன் டியோ' போன்களில் கடுமையான தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன.
சுமார் ரூ. 3 லட்சம் விலைக் கொண்ட இந்த போனை மடித்துப் பயன்படுத்தும் நடுப்பகுதியில் செங்குத்தாக விரிசல்கள் ஏற்படுவதாக உலகளவில் பயனர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மடிப்புப் பகுதிக்கு அடியில் உள்ள சப்போர்ட் பார் சரியாக விலகிக் கொள்ளாமல் அதிகப்படியான அழுத்தம் கொடுப்பதே இந்த விரிசல்களுக்குக் காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.