/nakkheeran/media/media_files/2026/09/27/ns-2026-09-27-08-04-12.jpg)
சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுக்குப் பதிலாக உணவுப்படியாக பணம் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பணியாளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கேட்பில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் பணம் வழங்கக் கோரிக்கை விடுத்ததை அடுத்து ரூ.50 உணவுப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உணவுப்படியானது மாத ஊதியத்துடன் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும், இதன் மூலம் 24,264 பணியாளர்கள் பயனடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.