
சிவகார்த்திகேயன் நடிப்பில் சிவக்குமார் முருகேசன் இயக்கும் 'சேயோன்' திரைப்படத்தில், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு தந்தையாக சீமான் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
சீமான் படப்பிடிப்பில் கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு வைரலாகி வருகின்றன.